தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை புதிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

363

 

தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை புதிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்ய உடன் உத்தரவு பிறப்பிக்குமாறு மேல்நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு வலியுறுத்தி கோரிக்கை விடுத்தார் விஜித ஹேரத் எம்.பி. அவர் இதன்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:- சுமார் 15, 20 வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகளாக சிறைபடுத்தப்பட்டள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தை ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை காலம் நீடித்துக் கொண்டு அவர்களை சிறைப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 10 ஆயிரம், 15 ஆயிரம் அரசியல் கைதிகள் சிறையிலுள்ளனர்.

இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டுவந்த கே.பி. போன்ற புலிகளின் தலைவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்

SHARE