தேசியப்பட்டியலில் இருந்து ரஜீவ விஜேசிங்க விலக வேண்டும்: லிபரல் கட்சி கோரிக்கை

146

லிபரல் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லிபரல் கட்சியின் செயலாளர் கமல் நிசங்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

ரஜீவ விஜேசிங்க, முன்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்தார்.

அந்தநேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து விட்டு வெளியேறினார்.

தற்போது மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க முன்னின்று செயற்படுகிறார். குறுகிய காலத்தில் அவர் பல அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துள்ளார்.

இந்தநிலையில் இந்த முறை பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி நான்கு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகிறது. எனினும் இதனை கணக்கிலெடுக்காமல் விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

எனவே கட்சிக்கு மாறான கொள்கை இதுவென்பதால் தேசியப்பட்டியலில் இருந்து விலக வேண்டும் என்று நிசங்க கோரியுள்ளார்.

SHARE