தொடர்ந்து 6 மாதம் பாலியல் சித்ரவதைக்கு ஆளான 14 வயது சிறுமியின் கண்ணீர் பேட்டி

229

ஈராக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தொடர்ந்து ஆறு மாதம் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளானதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஈராக்கின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் Ekhlas. இவருக்கு 14 வயது இருக்கும் போது, Daesh அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அவர் இருக்கும் பகுதிக்கு வந்து பலரை கொலை செய்துவிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றுள்ளார். அதில் Ekhlasம் ஒருவர்.

அதன் பின் அவர்களிடமிருந்து தப்பிய அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், தனக்கு 14 வயது இருக்கும் போது தன்னை தீவிரவாதிகள் கடத்தி போய்விட்டதாகவும், அப்போது தன்னுடன் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த சம்பவத்தின் போது தீவிரவாதிகள் அங்கிருந்த பலரை கொலை செய்தனர். அதில் தன்னுடைய தந்தையை தன் கண் முன்னரே கொலை செய்தனர்.

கடத்திச் சென்ற அவர்கள் அங்கிருக்கும் மற்ற தீவிரவாதிகளிடம் தன்னை விற்றுவிட்டனர். அதில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகளும் அடங்குவர்.

அப்போது அங்கிருக்கும் தீவிரவாதி ஒருவன் தன்னை கொடூரமான முறையில் சித்ரவாதை செய்ததாகவும், அவன் தினந்தோறும் தனக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் கொடுப்பான் என்றும் இது போன்று தொடர்ந்து ஆறு மாதங்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானதாக கூறியுள்ளார்.

அவனிடம் சிக்கிய நான் எப்போது அவன் வெளியில் செல்லுவான், அதாவது சண்டை போட செல்வான் என்று காத்துக் கொண்டிருந்தேன், தான் நினைத்தது போன்றே அவன் ஒரு நாள் சென்றான், இதை பயனபடுத்திக் கொண்டு நான் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டேன்.

அதன் பின் நான் ஜேர்மனியில் தங்குவதற்கு தனக்கு உதவிய அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் Jacqueline Isaac-க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக Ekhlas கூறியுள்ளார்.

மேலும் தனக்கு தற்போது 16 வயது ஆகிறது, நான் பாறை போல் வலுவாக இருப்பேன் என்று பலர் நினைக்கலாம், ஆனால் என்னுள் இருக்கும் வலி 100 மரணங்களுக்கு சமம் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

SHARE