அமெரிக்காவின் பால்டிமோர் நகரம் அருகே, சரக்கு கப்பல் மோதி உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்தவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆற்றில் மூழ்கிய இரண்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டிருப்பதாகவும் 8 பேரை காணவில்லை என்றும் தெரிவித்தார். ஆற்றை கடக்க முடியாமல் 20 கப்பல்கள் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக...
  காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார். இந்நிலையில்...
  வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் 52 பேர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 8 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4...
  நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் இன்றி வாழ முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் இன்றி வாழ்க்கையை முன்னெடுக்கத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்கள் பிரதிநிதி பொதுமக்கள் பிரதிநிதியாக தெரிவாவதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கையைப் போன்றே வாழ முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின்...
  மாணவர்களுக்கு உணவு வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய பகல் உணவுத் திட்டம் இல்லாதொழிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அரசாங்கம் உணவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமது...
  அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில்...
  அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில், உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலுக்கு தலைமை தாங்கும் முத்துவா என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவின் வீட்டின் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டின் மீது சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றச்செயல்கள் துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துருகிரி மற்றும் நவகமுவ பிரதேசங்களில்...
  மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாக மைத்திரி கூறியிருந்தார். இந்த வாக்கு மூலம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்வைக்கப்படவுள்ள கோரிக்கை மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றிற்கு அழைத்து விசாரணை நடத்துமாறு கோர உள்ளதாகவும்...
  பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டிற்கு புதிய கல்வி முறையை அமைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதோடு அதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பு அத்துடன், பல்கலைக்கழக கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றத்திற்கு...
  9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளில் போதைப்பொருள் விற்பனை நேற்றைய தினம் (26.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை...