ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா. இதன் கதாநாயகியான ரேஷ்மா, இந்த சீரியலில் எப்படி நுழைத்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், முதலில் நான் இந்த தொலைக்காட்சியில் டான்ஸ் ஷோ ஒன்றில் தான் பங்கேற்றேன். அப்போதே புதிதாக சீரியல் ஒன்றை ஆரம்பிக்க போவதாக பேச்சுகள் எழுந்தன. ஒருநாள் டான்ஸ் ஆடிவிட்டு சோர்வாக அமர்ந்திருந்தேன். உடல் முழுவதும் வியர்வையில் ஈரமாக, வெறும் ட்ராக், டிசர்ட் மட்டும்...
குருணாகலில் திடீரென வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் எரிவாயு பலூன் ஒன்று தரையிறங்கியமையால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. தொடம்கஸ்லந்த - மீபிட்டிய பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் திடீரென 14 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் எரிவாயு பலூன் ஒன்று தரையிறங்கியுள்ளது. இந்த பலூன் தரையிறங்கியமையினால் வயல் நிலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த பலூன் திடீரென தரையிறக்கப்படவில்லை எனவும் அது உடைந்து விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் தாம்...
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பாரென அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு 2019ஆம் ஆண்டு முடிவுக்குள் தமது கட்சியிலிருந்து குறித்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாரென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் ஏனைய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்றவற்றைவிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிருபித்திருப்பதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ,...
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டிற்கு சற்று தொலைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,...
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய பக்தர்களுக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா இடம்பெறுகின்றது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு  யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை  அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை திருவிழா குறித்து பாதுகாப்பு அதிகாரிகள்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவேண்டும் என்பது எங்களிற்கு தெரியும் நீங்கள் தயார் என்றால் நான் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஏனைய உலக நாடுகளை போன்று முன்னோக்கி நகரவேண்டுமானால் இலங்கையர்கள் என்ற பொதுவான அடையாளத்தினை உருவாக்கவேண்டும்,இலங்கையின் பலரின் எதிர்பார்ப்பாக இது உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மீண்டும் இலங்கையர்கள் என்ற எண்ணக்கருவை பலப்படுத்தவேண்டும்...
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று (13) மாலை பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாலிக்குளம் பகுதியிலுள்ள தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை கழுவுவதற்காக கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து 15 வயதுடைய சொக்கலிங்ககுமார் லோபிகா என்ற பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் பிள்ளையினை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலத்தினை மீட்டெடுத்த பொலிஸார்...
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை தாம் பரிந்துரைப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் அதனை தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியல் அமைப்பின் சமஷ்டி பண்புகள் முன்னிலைப்பெறுமாயின் அதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் அரசியல்...
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதிலும் பல இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழையுடன் கூடிய வானிலை காணப்படுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
வத்தளை – ஹேக்கித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சி.சி.ரீ.வி காணொளிகள் கிடைத்துள்ள நிலையில், அதனைக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் இரண்டு கார்களில் வந்த சந்தேகநபர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்  24 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது, உயிரிழந்த இளைஞர் ஒருவரின்...