அம்பாறை, கொடுவில் பகுதியில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மணல் மேட்டிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் பரிதாபமான உயிரிழந்துள்ளார். அம்பாறையில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைப் பெற்றுக் கொள்வதற்காக கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத...
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத்  தோற்றவுள்ள மாணவர்கள், தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை இதுவரை  சமர்ப்பிக்காமல் இருந்தால்,  உடனடியாக அவற்றை சமர்ப்பிக்குமாறு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.   தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள மூன்று  இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களில், சுமார் மூன்று இலட்சம் பேருக்கு,  அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  ஆட்பதிவுத்  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பெண்ணை திருமணம் செய்துகொண்ட இந்தியர், குடிபோதையில் மனைவியை குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த Douglas Derick Eustace (44) என்ற நபர் அவுஸ்திரேலியாவிற்கு கோடை விடுமுறையை கழிக்க சென்ற போது Mary Freeman (41) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் பிடித்து போகவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், ஜனவரி 27-ம்...
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில் இருந்து பல்வேறு மொடல் அழகிகள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோவில் GCDS குழு மொடல் அழகிகள் மூன்று மார்பகங்களுடன் தோன்றி மேடையில் ஒய்யார நடை போட்டுள்ளனர். இவர்கள் செயற்கையாக மார்பகங்களை உருவாக்கி அதனை பொருத்திக்கொண்டு பேஷன் ஷோவில் கலந்துகொண்டனர். அதாவது எதிர்காலங்களில் மனிதனின் உடல் வடிவம் மாறி, பிராண்டுகள் தான் உலகத்தை ஆளும்...
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் நேற்று சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். மிதிவெடி அகற்றும் படையினருக்கு குறித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5 ரங்கன் பூஸ்டர்ஸ், 92 ஜொனி மிதிவெடிகள் மற்றும் 42 நபர்களை தாக்கியொழிக்கும் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை மன்னார் பரப்பு கடந்தான், திருக்கேதீஸ்வரம், பரசன்குளம் மற்றும் பெரியமடு பிரதேசங்களிலிருந்து இருந்தும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக...
யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து மூன்றம் கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று , அரசியல் கைதிகளை விடுதலை செய் , பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம்...
வவுனியா இராசேந்திரன்குளம் வன இலகாப்பகுதியில் சட்டவிரோதமாக காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மத்திய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் அவசரக்கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க  அதிபர் தலைமையில்  இடம்பெற்றுள்ளது. வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வனத்திணைக்களத்திற்கு உரித்தான ஒதுக்குகாடு 1921ஆம் ஆண்டு ஓதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3500 ஏக்கர் விக்ஸ்காடு, பாவற்குளம் போன்ற பகுதிகளில் வன...
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் சீனிவாசன் வந்து...
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உடல் எடையைக் குறைக்க பலரும் கடுமையான டயட்டை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய உடல் எடை பிரச்சனையைப் போக்க இரவு நேரங்களில் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத உணவுகளைப் பற்றி பார்ப்போம். சாப்பிட வேண்டிய உணவுகள் செர்ரிப் பழங்கள் செர்ரிப் பழத்தில் உள்ள மெலடோனின் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். எனவே இரவு உணவுக்கு பின் இப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு அழ்ந்த...
இத்தாலியில் உள்ள Lake Como என்ற இடத்தில் தான் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்துள்ளது. Lake Como என்ற இந்த இடம் காதலை குறிக்கும் மற்றும் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே இந்த இடத்தை அதிகம் பேர் தெரிவு செய்கிறார்கள். 1568 ஆம் ஆண்டு Lake Como வில் ஆடம்பர மாளிகை கட்டப்பட்டது. அதன் பின்னர் இது சொகுசு ஹொட்டலாக மாற்றப்பட்டது. மேலும், திருமணத்திற்காக இங்கு...