ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைந்த புதிய விமான நேற்றைய தினம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற சர்வமத வழிப்பாடுகளின் பின்னரே இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இது எயார் பஸ் நிறுவனத்தினால் ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையில் தயாரிக்கப்பபட்ட A-321 ரக விமானமாகும். இந்த விமானம் எரிபொருளை குறைவாக பயன்படுத்தி பயணிக்க கூடிய முறையில் தயாரிக்கப்பட்ட புதிய நிர்மாணிப்பாகும். விமானத்தின் வர்த்தக பிரிவில் 12 பேர் பயணிக்க முடியும். அத்துடன் ஏனைய...
(Dilan Maha) இன்றைய அரசியலில் இந்நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவை கொண்டு வர வேண்டும் என்று சிலர் கோசம் வழங்குகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். கோறளைப்பற்று இளைஞர் சேவை சம்மேளனத்தினால் இளைஞர் சமூகப் பொறுப்பாளராகும் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாமின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து...
அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற குடும்பஸ்தர் , மீண்டும் வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். அத்துடன் மிகுந்த சோர்வு நிலையிலும் இருந்துள்ளார். அது குறித்து அவரது மனைவியை விசாரித்த போது , வரும் வழியில் அலரி விதையை...
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றிசீயா ஸ்கொட்லான்ட் நாளை இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டே அவர் இலங்கைக்கு வரவுள்ளார். 2016ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் ஸ்கொட்லான்ட், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைகிறது. இலங்கை வரும் ஸ்கொட்லான்ட், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். இதனையடுத்து அவர், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உட்பட்ட அரசாங்க அமைச்சர்களையும் சந்திப்பார் என குறிப்பிடப்படுகிறது. 2018ஆம் ஆண்டு லண்டனில்...
(Dilan Maha) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியபோரதீவு-பழுகாமம் ஆற்றுப்பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். நேற்று இரவு குறித்த ஆற்றங்கரையினை சூழவுள்ள நாணற்புற்கள் மற்றும் காடுகளில் இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் எனவும் பல பறவைகள்...
அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தினூடாக, நாட்டின் அனைத்துப் பாகங்களும் அபிவிருத்தி அடையவுள்ளதுடன், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தி அடையுமென, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இதற்காக, பிரதேச மக்களின் பாரிய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் கூறினார். அரசாங்கத்தின் கம்பெரலிய வேலைத்திட்டத்திலும் ஏனைய நிதியொதுக்கீட்டின் கீழும், ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்,...
-மன்னார் நகர் நிருபர்-   ஐக்கிய தேசியக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.மரிய சீலனின் கோரிக்கைக்கு அமைய மீள் குடியேற்ற அமைச்சர்   ரீ.எம்.சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்  ஏ.எஸ்.எம். பஸ்மி அவர்களின் ஒத்துழைப்போடு நேற்று திங்கட்கிழமை(30) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கட்டையடம்பன், பண்ணை வெட்டுவான், சோதிநகர்,...
-மன்னார் நகர் நிருபர்-   மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் துண்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னாரில் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை (3)  மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை மேற்கொள்ள   மன்னார் பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தொடர்ச்சியாக சீரான மின்சாரம் மக்களுக்குக் கிடைத்ததில்லை, தினமும் ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் அல்லது நாள் முழுவதும் என்று மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையாகிவிட்டது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றார்கள்.  குறிப்பாக மாணவர்களுக்குப் பரீட்சைகள்...
(Dilan Maha) மட்டக்களப்பு - ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர உட்பட பிரதேச அரசியல்வாதிகள் முன்வைத்த எந்தப் பிரச்சினைக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை 29.07.2018 ஏறாவூருக்கு வருகை தந்து ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அதனை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் 458 இலட்ச ரூபாய் செலவில்...
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் நிலவரம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் எப்போது விவாத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட உள்ளகதாவும் தெரிவிக்கப்படுகிறது.