கொழும்பு அட்டன் பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டவளையிலிருந்து அட்டன் நோக்கி வந்த சிரிய ரக லொறியே 03.03.2017 காலை 9.30 மணியளவில்  குயில்வத்தை பகுதியில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமுற்ற சாரதியும், மற்றொருவரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அதிக வேகமாக எதிரே வந்த வாகனத்திற்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே விபத்து...
  காணாமல் போனோர் தொடர்பாக அரசு கூறும் நொண்டிச்சாட்டால் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைகின்றது என வவுனியா வளாகத்தின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கத்தின் வவுனியா வளாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணாமல் போன உற்றார் மற்றும் உறவினர்களிற்கும், தொடர்ச்சியாக அவர்கள் படும் இன்னல்களுக்கும், அரசு வெளியிடும் நொண்டிச்சாட்டுகளையும், மழுப்பலான அறிக்கைகளையும்...
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு வருகை தரவுள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் ஏற்பாட்டில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான தரத்தினையும் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளில் எழுகின்ற நடைமுறைப் பிரச்சனைகளை ஆராய்வது என்ற அடிப்படையிலேயே குறித்த குழுவினர் இன்றைய தினம் வடக்கிற்கு வருகை தருகின்றனர். வடக்கில் மட்டும் 80 ஆயிரம் வீடுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ள...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மூன்று தினங்களில் 2,750 கடிதங்கள் குவிந்துள்ளன. தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது வவுனியாவில் 8வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த...
களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலைஉத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் கெளரவம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் மலர்வளையத்தை அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் வைப்பதையும் காரைதீவு பிரதேசசெயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மலர்ச்செண்டை தர்மிகனின் தாயார் திருமதி சிவயோகம்சிவானந்தத்திடம் கையளித்தார். அத்துடன் தர்மிகனின் பூதவுடலுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தாகள் மரியாதை செலுத்தி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.            
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது. எனினும், இலங்கைக்கு கால அவகாசம்...
இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளை சுட்டிக்காட்டி தனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அழிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நல்லாட்சி என கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களை மீள் அனுப்புகிறது எனவும் ஆனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக சித்திரவதைகள் தொடர்கின்றது எனவும் ஆதாரத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரின் வினாக்களுக்கு பதில்...
  ஊவா வெல்லஸ்ஸ புரட்சியின் போது பிரித்தானியர்களால் தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானியர்களால் தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரையும் தேசிய வீரர்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கையொப்பமிட்டார். இந்த நிலையில், வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு மகிழ்ச்சி...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் வளாக ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கின்ற நிலையில் பாதுகாப்பு கோரி நிர்வாகத்திடம் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாகக் கட்டடத்தினுள் விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2016.03.08 அன்று மேற்படி வளாகத்தில்...
கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த காரின் பதிவு இலக்கத்தை கொண்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல நபரான Sheymon Rauff என்பவரினால் இந்த கார் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. "gold chrome wrap" நிறுவனத்தின்...