படங்களில் நடிகர், நடிகைகள் காதல் செய்ததை பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களை பற்றிய தகவல் முன்வைக்கிறோம் இன்று.
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய காதலை அறிந்துகொண்டது ஒரு பேட்டியில். ஆம், பேட்டியெடுத்தவர் லதா அப்போது கல்லூரி மாணவி. இப்போது அவரது மனைவி.
திருமணமானது பிப்ரவரி 29, 1981.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் 1978 இல் பிரபல நடன பயிற்றுனர் வாணி கணபதியை திருமணம் செய்து விவாகரத்தாகி பின் சரிகாவை 1987...
தல அஜித் நடிப்பில் பெயரிடாத தல 57 படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. ஆஸ்திரியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது ஹைதராபாத்தில் மிக முக்கியமான காட்சிகளை ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்து வருகிறார் இயக்குனர் சிவா.
இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை வட இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார், படத்தில் அஜித் முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வடஇந்தியாவுக்கு தேடி செல்லும் போல் காட்சி உள்ளதாம்.
இதனால் அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கேயே நடத்தவுள்ளாராம்....
யாழ். முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்திரன சிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து...
16,10.16 அன்று யாழ் இந்து மகளிர்க் கல்லூரி யில் நடைபெற்ற வட மாகாணத்துக்கான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவை சேர்த்த மாணவர்கள் 35 பதக்கங்களை பெற்றுள்ளார்கள் இதில் 19 தங்க பதக்கம் என்பது குறிப்பெடுத்தக்கது.
இவ்வாறு தங்கப்பதக்கம் பெற்றவர்களில் வவுனியாவை சேர்த்த நந்தகுமார் ஷபிந்தன் என்பவர் 13 வது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டு வவுனியா மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளார் இவ்வாறு தங்கப்பதக்கங்களைப்...
ரயில் போக்குவரத்தை விரிவு படுத்தும் நோக்கில் ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் நன்மை அடைய கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து வழங்கப்படாத நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து வழங்குவதாக தற்போதைய அமைச்சர்கள் கடந்த தேர்தல்...
புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமதான நீதிவான் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் மதுபானப் போத்தல்களால் தாக்குதல்.
Thinappuyal -
யாழ். கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணியம் நமசிவாயம் என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால்( 18) நேற்று இரவு 9.00 மணியளவில் மதுபானப் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு சுப்பிரமணியம் நமசிவாயம் சமதான நீதவான் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் தெரியவருவது
இத் தாக்குதல் சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும் இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் (21-09-2016) முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது...
யாழ்பாண தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு ஜனாதிபதியும் அனுமதி வழங்கினார்.
Thinappuyal -
யாழ்தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கரையோர பயணிகள் போக்குவரத்து சேவையானது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. பயணிகள் போக்குவரத்தின் பொருட்டு...
பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி கிளிநொச்சி மண்ணில் வடக்கு மாகாணங்களின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களையும் இணைத்து கிளிநொச்சி துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் KPL-T 20 போட்டி உண்மையில் ஒர் வரலாற்று பதிவாக திகழ்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எம்.பி கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கம் காவேரிக்கலாமன்றம் மற்றும் Vanni Hope ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் நடாத்தும் KPL-T 20 போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பு
Thinappuyal -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பாராளுமன்றப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.
குறித்த தளபாடங்களின் உத்தியோகபூர்வக் கையளிப்பு நிகழ்வு நேற்று (18) பிற்பகல் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இணைப்புச் செயலாளர் த.நடனேந்திரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.லலீசனிடம் தளபாடங்களைச் சம்பிரதாய...
அட்டன் கல்வி வலயம் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் வருடாந்த பாரதிவிழாவும், ஆய்வரங்கமும் எதிர்வரும் 20,21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் பீ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 20ஆம் திகதி வியாழக்கிழமை புதிய பரிமாணமாக 2017 ம் ஆண்டு கா.பொ.த. உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மலையகத்தின் சமகால இலக்கியம், சமூக அரசியல், பண்பாடு எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கமும், கல்லூரியின் பிரதான மண்டபத்தில்...