தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி காணப்படுகின்றது. உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலேயே அதிகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
இருப்பினும் தமிழர்கள் அதிகமாக வாழும் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் நகரத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட புகையிரத சேவைஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
தீபாவளியினை முன்னிட்டு குறித்த புகையிரத சேவையினை அமுல்படுத்துவதற்கு அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர்...
பிரதமர் அலுவலகத்தில் கனிஷ்ட நிர்வாக பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி 2016.10.26
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தின பராமரிப்பு நிலையத்திற்கு பாலர் வகுப்பு ஆசிரியருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி 2016.10.27
விண்ணப்ப முடிவு திகதி 2016.10.31
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்வரை புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள்- இரா.சம்பந்தன்
Thinappuyal -
புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம்திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்வரைகாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விவசாயம், கால் நடை வளர்ப்பு மீன் பிடித்துறைகள் அபிவிருத்திசெய்யப்பட வேண்டும்.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கையை எதிர்க்காமல், அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை இலங்கையர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சம்பந்தன்...
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளை ரத்துச்செய்வதற்கான எந்த நோக்கமும் ஜனாதிபதியிடம் இல்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள், அரசியல் ரீதியாக செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாட்டுக்காக தியாகங்களை மேற்கொண்ட போர்வீரர்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில அரசியல்வாதிகள், ஜனாதிபதியின் கருத்தை,...
இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்கவுள்ளதாக ஐ.ஓ.எம் என்ற இடப்பெயர்வுக்கான சர்வதேச ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்த உதவிகளை வழங்கவுள்ளதாக ஐ.ஓ.எம் குறிப்பிட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையிலான மனிதக் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளியுறவு அமைச்சுக்கு ஒத்துழைப்பை வழங்கவும் ஐ.ஓ.எம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த உதவிகள் குறித்த உறுதி மொழிகளை ஐ.ஓ.எம்மின் தூதுவர் வில்லியம் லெசிஸ்விங், அமைச்சர் தலதா அத்துகோரலையிடம்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களின் விஷேட கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா?
Thinappuyal -
ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இன்று (18) விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 7.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சி எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு...
கனேவத்தையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்கஹாவெல – அலவ்வவிற்கும் இடையே உள்ள புகையிரத கடவை சந்தியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்குகள் சரியாக செயற்பட்டும் அதை மீறி கடவையை கடக்க முற்பட்டமையே இந்த விபத்துக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 62...
உலகில் பட்டினியை ஒழித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 87ஆவது இடத்தை பிடித்துள்ளதாக "உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்" ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
118 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்துள்ள தெற்காசிய நாடுகளான இந்தியா 97ஆவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலகளாவிய ரீதியில் 29 சதவீதத்தால் பட்டினியர்களின் எண்ணிக்கை...
வடக்கின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் நேற்று (17) மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார பதில் அமைச்சர் குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனின் கடந்த வாரம் லண்டன் சென்றுள்ள காரணத்தினால் தற்போதைய பதில் முதலமைச்சராக...
திருகோணமலை - தோப்பூர் 59ஆம் கட்டை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்று இன்று(18) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் பொலன்னறுவையைச் சேர்ந்தஇருவரே படுகாயமடைந்துள்ளதாக தோப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த வண்டி பாதையில் சென்று கொண்டிருக்கையில் அதன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததாலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், படுகாயமடைந்த நபர்கள் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...