படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் அடுத்த மாதம் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் படுகொலை வழக்கு இன்று (18.10.2016) செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சந்தேகநபர்களான 12 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த சந்தேக நபர்கள் 12 பேரும் இன்று நீதிமனறத்தில்...
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் குறித்தும் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனரான திருக்குமார் நடேசன் நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை பரபரப்பாக பேசப்பட்டதோடு, அனைவரும் அறிந்த விடயமே. திருக்குமார் நடேசனின் கைது சம்பவத்தை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன்,...
கடந்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மீது அதிருப்பதி அடைந்த மக்கள் மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கமைவாக ஜனவரி எட்டு என பெயரிடப்பட்ட மக்கள் புரட்சியின் மூலம் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவது மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற நாடொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும்...
அண்மையில் நுகேகொட - ஜுப்லிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பிரபல நடிகை கவீஷா அயேஷானி பரிதாபமாக உயிரழந்தார். குறித்த விபத்து தொடர்பில் பல்வேரு வகையான மாறுபட்ட கருத்துகள் வெளிவந்த நிலையில் தற்போது கவீஷா ஓட்டிச்சென்ற கார் விபத்து ஏற்பட்ட விதம்தொடர்பில் சீசீடிவி (cctv) கானொளி தற்போது வெளியாகியுள்ளது. அவர் சென்ற கார் நேராக பயணித்து பின்னர் தீடீரென திரும்பி வழுக்கியவாறுவீதியை விட்டு விலகிச் சென்று அடுத்த பக்கம் திரும்பி வேறு ஒரு...
போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர். நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது) 4.61 உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்தார். அதேவேளை, 17 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள்...
உலக உணவு தினத்தை முன்னிட்டு இறுதி நாளான இன்று புதிய லிபரல் பொருளாதார திட்டங்களை தோற்கடிப்போம் மற்றும் உணவு தன்னாதிக்கத்துக்காக ஒன்று திரள்வோம்! என்னும் தொனிப்பொருளில் மக்கள் பாத யாத்திரை பொதுகூட்டம் கொழுப்பு விகார மகாதேவி பூங்கா வெளியரங்களில் இடம்பெறுகின்றது. இந்த மாபெரும் மக்கள் யாத்திரைக்கு இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இந்த உணவு தன்னாதிக்கம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இன்று குறிப்பாக வடக்கு...
பொருளாதார ரீதியில் நெருக்கடியில் இருக்கும் எமக்கு 730 ரூபாய் சம்பளவுயர்வு போதாது, ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கோரி டிக்கோயாவில் 18.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 11 மணியளவில் தொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை 18 மாத காலமாக இழுபறியில் இருந்து வந்த நிலையில் இன்று முதலாளிமார் சம்மேளனமும், கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் 730 ரூபாய் அடிப்படைச் சம்பளத்திற்கு கைச்சாத்திடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள...
அதிவேக வீதிகளில் விசேட வேகக்கட்டுப்பாடு நிலையங்களை ஸ்தாபித்து, கண்காணிப்பு கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில், வேகக்கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரின் ஊடாக குறித்த சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதனால், அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதியில் இருக்கும் தனது பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அனுமதி தருமாறு வயோதிப பெண் ஒருவர் மரத்தின் மீது ஏறி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த வயோதிபப் பெண்ணே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பெட்டிக்கடை 2011 இல் இருந்து அந்த பகுதியில் இருப்பதாகவும், தற்போது கடையை மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே...
கோலிவுட்டில் கால் பதிக்கும் ஹீரோயின்கள் எல்லோருமே ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் ஜொலிப்பார்கள். பிறகு அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே காலத்தை கடந்தும் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்வார்கள். அப்படி வாலி மூலம் அறிமுகமாகி குஷியில் தன் துறுதுறு நடிப்பால் தமிழகத்தையே கவர்ந்து இழுத்தவர் ஜோதிகா. எந்த ஒரு நடிகையும் தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே நன்றாக சம்பாதித்து, பிறகு...