கோலிவுட்டை பொறுத்த வரை நடிகைகளின் சம்பளம் எல்லாம் மார்க்கெட் இருக்கும் போதே உயர்த்தினால் தான் உண்டு. அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படத்திலும் தொடர்ந்து கமிட் ஆகி வரும் நடிகை தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். தல கொடுத்த சான்ஸில் மீண்டும் ரீஎண்ட்ரியாகிய தயாரிப்பாளர் ஒருவர், அடுத்து தான் தயாரிக்கும் படத்திற்கு அந்த நடிகையிடம் தான் கால்ஷிட் கேட்டு சென்றுள்ளார். அவர் ரூ 1 கோடி வேண்டும் என கேட்க,...
வளர்ந்து வரும் நடிகர்களுக்கு எப்போதுமே முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன வேடமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிதான் இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய காளி வெங்கட்டிற்கும் ஒரு ஆசை இருக்குதாம். அதாவது விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தாலும் அவருடன் முழு படத்திலும் வருவது போல் நடிக்க முடியவில்லை. அதேபோல் அஜித்துடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என மனம் திறந்து பேசியுள்ளார் காளி வெங்கட்.
  முருகதாஸ் படத்தில் நடிக்க இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து அஜித்துடன் கூட்டணி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த அச்செய்தி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது. முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு முன்பே ஒரு இளம் ஹீரோவிற்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்தாராம். அதில் ஜெய் நடிக்கப்போவதாக கூட ஒரு செய்தி...
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் பாதி வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து அனிருத் ஒரு சில தகவலை கசியவிட்டுள்ளார். இந்த படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல் இருக்கும். படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும், மேலும், பின்னணி இசைக்கு இந்த படத்தில் நிறைய ஸ்கோப் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இப்படம் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது, இதில்...
பிரித்தானியாவில் நடந்த கணிதம் தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற நபரை 12 வயது சிறுவன் திணறவைத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான சிறப்பு கணித மேதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பட்டம் பெற்ற Rachel Rile என்ற பெண் அழைக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையிலான ஒரு குழுவும், சிறுவர்கள் தலைமையிலான...
சமீபத்தில் காலமான தாய்லாந்தின் மன்னரை அவமதித்ததாக எழுந்த புகாரை அடுத்து பெண் ஒருவரை மன்னரின் புகைப்படத்தின் முன்பு மண்டியிட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக தாய்லாந்தில் ஆட்சியில் இருந்தவர் காலமான மன்னர் பூமிபோள் அதுல்யதேஜ். இவர் தாய்லாந்தை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு வந்தது மட்டுமின்றி பல வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் மன்னர் பூமிபோல் காலமானல். அவரது நினைவாக ஒரு மாத...
  வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு எனும் BIMSTEC, பிராந்தியத்துக்குள் வர்த்தகத் துறையினை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான தொழில்நுட்பத்தினை பரிமாறிக் கொள்ளுதல் கட்டாயத் தேவையாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கேந்திரமாக இலங்கையினை மாற்ற தயாராக இருப்பதாகவும் அதற்கென ஒரு பிரத்தியேக நிறுவனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இன்று (16) இந்தியாவின் கோவா நகரத்தில் ஆரம்பமான BIMSTEC அரச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன...
ஜேர்மனியில் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரே ஒரு குறுந்தகவலை முறியடிக்க 100 பொலிஸார் அதிரடியாக குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மூனிச் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொண்டாட்ட பிரியரான 18 வயது இளைஞர் ஒருவர் தனது வாட்ஸ் அப் நண்பர்களை அனைவரையும் அழைத்து பெரு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். விருந்து துவங்கிய சில மணி நேரங்களிலேயே கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. மட்டுமின்றி விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூச்சலால்...
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லொறி ஒன்றினை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பொகவந்தலாவ பகுதியிலே 18.10.2016 அதிகாலை 3 மணியளவில் நல்லத்தன்னி விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மையங்கனையிலிருந்து 3 கியூப் மணல் ஏற்றிக்கொண்டு பொகவந்தலாவ பகுதிக்குச் சென்றபோதே அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மையங்கனையிலிருந்து கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, அட்டன், நோர்வூட் வழியாக...
விவசாய முன்னேற்றத்திற்கு எத்தனையோ புதிய புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, களம் இறங்கியுள்ளன. அப்படிப்பட்ட தொழில் நுட்பங்களால்தான் மக்கள் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்து விவசாயமும் சமாளிக்கிறது. அதுபோன்ற ஒரு வளர்ச்சிதான் பிரிட்டனின் நிறுவனம் ஒன்று முதன்முதலாக கண்டுபிடித்திருக்கும் ஓட்டுநர் இல்லாத டிராக்டர். இது துல்லியமான உருவாக்கத்தால், எந்த இலக்கிடமும் ஒரு அங்குலம் வரை நெருங்கிச் செல்ல முடிந்தது. இது பிரிட்டனின் நிலப்பரப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டனில் உள்ள நிலங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த...