ரஜினிமுருகன், ரெமோ மூலம் வெகு சீக்கிரமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடிருக்கிறார்.
மலையாளம், தமிழ் சினிமாவிலிருக்கும் பிரபலங்கள், நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனால் மகிழ்ச்சியான கீர்த்திக்கு, சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்ததால் மிகுந்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருக்கிறாராம்.
தற்போது சூர்யாவுடன் TSK வில் பணியாற்றுவது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். இரட்டிப்பு மகிழ்ச்சியால்...
விக்ரம் இன்றுடன் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 26 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இவரின் அடுத்தப்படம் குறித்து பல வதந்திகள் உலா வருகின்றது.
இதில் சாக்ரட்டீஸ் இயக்கத்தில் இவர் நடிக்கப்போவதாக ஒரு பேச்சு எழுந்தது, ஆனால், விக்ரமிற்கு இருமுகன் படத்தில் பணியாற்றிய போது ஆனந்த் ஷங்கரை மிகவும் பிடித்துவிட்டதாம்.
இதன் காரணமாக தன் அடுத்த படத்தையும் அவருகே தரலாம் என்று யோசித்து வருகிறாராம், இதற்கு பின் தான் சாமி-2 தொடங்குமாம்.
லட்சுமி ராமகிருஷ்ணன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனர் என்பதை தன் அம்மணி படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
இந்நிலையில் அம்மணி படத்திற்கு பெரிய ப்ரோமோஷன், விளம்பரம் ஏதும் இல்லை, ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாரட்டி வருகின்றனர்.
விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட லட்சுமி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் நன்றியை எல்லோருக்கும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் மிகு...
சமீபகாலமாக ஸ்ருதிஹாசன் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவரின் உடை தான் என்று காரணம் என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
மேலும் ஒரு சில தெலுங்கு சினிமா படங்களில் பாடலுக்கு மட்டும் அவர் ஆடிய நடனம் என்று மற்றவர்கள் சொல்லிவரும் நிலையில் தெலுங்கில் வெளியான ப்ரேமம் படத்திற்காகவும் அவரை விமர்சித்தனர்.
சமீபத்தில் சுருதி வெளியிட்ட "பிட்ச்" என்ற குறும்படத்திற்கும் இந்த சர்ச்சை தொடந்தது. ஆனால் ஸ்ருதியை பொறுத்தவரை தன் மனதில்...
உலக அளவில் பாகுபலி வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த நிலையில் இன்னும் பிரமாண்டமாக அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் ராஜமௌலி.
உச்சத்தை தொட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய வேடங்களில் ஒன்றான பல்வாள் தேவா ராணா டகுபதி இந்த பார்ட் 2 விற்காக உடல் எடை பயங்கரமாக உயர்த்தி இருக்கிறார்.
அடுத்ததாக அவர் முக்கிய ஒரு கதையில் கமிட்டாகியுள்ளாராம். இது சுதந்திரத்திற்கு முன்பு நேதாஜி போஸின் இயக்கத்தை மையமாக...
முழுமையான பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பலமிக்க தேசமாக இலங்கை எழுந்து நிற்கிறது – ஜனாதிபதி
Thinappuyal -
பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக நீண்ட காலமாக அடைய முடியாமல் போன பொருளாதார வாய்ப்புகளை வெற்றிகொண்டு நாட்டின் முழுமையான பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பலமான தேசமாக இலங்கை எழுந்து நிற்கிறது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்தியாவின் கோவா நகரில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய உலகின் பொருளாதார பலமிக்க நாடுகளின்...
அரச துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதனைப் போன்று அரசியலிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது மிக அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(17) நடைபெற்றது.
மேலும், உள்ளூராட்சி தேர்தல்களின் போது தமிழ் மக்கள் சார்ந்த பிரதிநிதிகள் மிகக் குறைவாக காணப்படுகின்றனர்.
இதனால்...
இங்கிலாந்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாளைய தினம் நாடு திரும்ப உள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவே இவர் விரைவில் நாடு திரும்ப உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள சந்திரிக்கா...
பேஸ்புக் மூலம் பல்வேறு கதைகளை பிரச்சாரம் செய்து சிலர் அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, அவர் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சில அமைச்சுக்களை தன்வசப்படுத்திக்கொண்டதையும் அமைச்சர்...
லசந்தவின் கொலைக்கு உரிமை கோரி இராணுவ வீரர் தற்கொலை – தொலைபேசி பதிவுகள் கண்டுப்பிடிப்பு
Thinappuyal -
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலையை செய்ததாக கூறி கடந்த வாரம் துாக்கிட்டு தற்காலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரியின் தொலைபேசி பதிவுகளை கண்டுப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இராணுவ அதிகாரியின் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்தி போன்றவை அழிக்கப்பட்ட விபரங்களை தெரிந்து கொள்வதற்காக பொலிஸார் தொலைபேசி சேவை வழங்குநரின் உதவியை நாடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த...