மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி யோசிதவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இந்த மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்காக ஒரு மாதத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி தருமாறு அந்த மனுவில் யோசித குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் இந்த மனுவை தனது சட்டத்தரணி ஊடாக கடந்த 20ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த...
பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தகுந்த வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற ஒழுக்கங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...
மின்னேரிய - ரோடவேவ பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தி நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு பாவனைக்கு பொறுத்தமற்ற அரிசி காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிங்குராங்கொட பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு ஒன்றில் குறித்த அரிசி தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் குடியேறும் அகதிகள் பிரெஞ்சுக்காரர்களாக மாறி வாழ வேண்டும் என்று முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிக்கோல்ஸ் சர்கோஸி கலந்து பேசினார்.
அப்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையாக போரிடுவேன் என்றார்.
மேலும், பிரான்ஸ் முழுவதும் ஒரே சமுதாயம் என்று கூறிய அவர் சிறுபான்மையினரின் கொடுங்கோன்மை அகல வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் அமைக்கவுள்ள புதிய கட்சிக்கு நாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என லங்கா சம சமாஜ கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய கட்சி நிச்சயமாக அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
புதிய கட்சி அமைக்கப்பட்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கு எதிரான கட்சிகள், மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும்...
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் இன்று கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கி விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 08ஆம் திகதி தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி தங்களின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...
முதற் தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ் துரையப்பா விளையாட்டரங்கில் செப்டெம்பர் 30 தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
நான்குநாள் இடம்பெறும் இந்த விழா செப்டெம்பர்30 அன்று சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் பி.ப.3 மணியளவில் ஆரம்பமாவுள்ளது.
பிரதமர் இக் காலகட்டத்தில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதால் அவர் பங்கேற்ற மாட்டார்.
மேலதிகமாக இணைக்கப்பட்ட புதிய எட்டு விளையாட்டு நிகழ்வுகளுடன் மொத்தமாக 33 நிகழ்வுகள் இடம்பெறும்.
1967இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார்.
நியூயோர்கிலுள்ள லோவர்ஸ் ஈஜன்ஸி ஹோட்டலில் ஜனாதிபதி தங்கியுள்ளார்.
இதன்போது குறித்த ஹோட்டலின் அவசர எச்சரிக்கை சமிக்ஞை திடீரென இயங்கியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டதுடன், அங்கு காவலுக்கு இருந்த பாதுகாவலர்கள் செய்வதறியாது தலைதெறிக்க ஓடியுள்ளதாக தெரிகின்றது. இந்த சம்பவம் நேற்று...
உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாதது தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம்.
துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.
எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடையை குறைக்கமுடியும்.
முதல் நாள்
ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை,...
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிகம் விரும்புவதால் என்னவோ சிறிய ரக பாஸ்புட் உணவகங்கள் முதல் பெரிய நட்சத்திர ஹொட்டல்கள் வரை எங்கும் பாஸ்மதி அரிசியை உணவுக்கு பயன்படுத்துகிறார்கள்.
மற்ற அரிசி வகைகளை விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம்.
இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு.