மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது. நீல நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல வளத்தையும், சத்துக்களையும் தருகிறது. நீர்ச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள்...
தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. மஞ்சள்காமாலை நோய் 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும். கல்லீரல் பிரச்சனை 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு...
மறைந்த திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் குடும் பம் வறுமையில் இருப்ப தாகவும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து நா.முத்துக்குமார் தம்பி ரமேஷ்குமார் எழுதி யுள்ள கடிதத்தில் கூறி இருப்ப தாவது:- அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சி யில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...’’...
வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் - மாம்புரி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவியின் மூத்த சகோதரி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். முறைப்பாடு செய்த 21 வயதான தனது மூத்த சகோதரியுடன் 14 வயதான பாடசாலை மாணவி...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிரேம்குமார் டனுஜன் எனும் சிறுவன் தலையில் நரம்பியல் நோயினால் பீடிக்கப்பட்டு பொரளை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். இச்சிறுவனுக்கு அவசரமாக தலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூபா 1,500,000 (பதினைந்து இலட்சம்) தேவைப்படுவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஏழ்மைப்பட்ட இச்சிறுவனது குடும்பத்தார் பரோபகாரிகளிடமிருந்து சத்திர சிகிச்சைக்கான பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க...
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி (Brand) தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒரு வருடத்திற்கு இவர் ஆக்கக்குறி தூதுவராக பணியாற்றுவார் என அமைச்சு கூறியுள்ளது. ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி இந்த பதவி வழங்கப்பட உள்ளது. இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 19ஆம்...
பலமுறை கண்டித்தும், கள்ளக்காதலை கைவிட மறுத்த, தனது கணவனை, அவரது மனைவியே கத்தியால கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சென்னை மண்ணடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருபவர் அக்பர் (49). அவரது மனைவி பாத்தாமுத்து (35). அவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகள் மற்றும் பாடசாலையில் படிக்கும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3...
‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை கமலே...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிக்கும் நபர்களை மனிதாபிமானமின்றி கொதித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய தார் டேங்கில் தூக்கிப் போட்டு கொல்லும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் ஷரியா நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர், ஈராக்கின், மொசூல் நகரில் 6...
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் சூழலில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த மத்த்தினைப் பின்பற்றுபவர்களோ யாரும் அற்ற பிரதேசத்தில் தமிழ் மக்கள் பரம்பரையாகக் கொண்ட பகுதியை ஆக்கிரமித்து பிரமாண்ட பௌத்த விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரை கடந்த சிவராத்ரிரி தினத்தன்று இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்காக 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது....