உலகின் மிகப்பெரிய விமானமான Airlander 10 முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசத்தியுள்ளது. Hybrid Air Vehicles எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கியுள்ள Airlander 10, 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது. விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையான Airlander 10, நேற்று மாலை Bedfordshire உள்ள Cardington விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை...
இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை வரவழைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம்தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கையின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டிசில்வா, அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் தென்னாசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலைசந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார். அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் பிந்திய நிலைகளையும் அவர்எடுத்துரைத்தார். இதனையடுத்து, ஜனநாயகத்துக்கான தென்னாசிய பிரதி செயலர் மற்றும்வர்த்தகத் துறைக்கான பிரதி செயலர் அருண்குமார் உட்பட்ட பல அதிகாரிகளையும்சந்தித்த...
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடு த்த மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு விஜ­யம் மேற்­கொள்­ள­வுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்ளவுள்ள­தாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­தது. ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தின் 71 ஆவது அமர்வு செப்­டெம்பர் 21 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் உரை­யாற்­று­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி நியூயோர்க் பய­ண­மா­கிறார். அதே­வேளை அடுத்த வருடம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் முடி­வ­டைந்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா பத­வி­யி­லி­ருந்து வெளி­யே­ற­வுள்ள நிலையில்...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2010 முதல் 2014 வரை 5 வருடங்கள் தனது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரியவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகி ஒரு வருடமாகிவிட்ட நிலையில் இந்த நல்லாட்சியை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீமெந்து பக்கட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17) நேற்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்து...
காணாமல் போனோரின் உறவினர்கள் முல்லைத்தீவு நகரில் இருந்து சென்று, வடமாகண சபை உறுப்பினர் து.ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தை இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர். காணாமல் போனோரை இதுவரை தேடித்தரவில்லை என்றும் காணாமல் போனோரை தேடும் அலுவலக செயலகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் காணமல் போனோர் தொடர்பான செயற்பாடுகளை கண்டித்தும் கொழும்பில் செயலகம் திறப்பதை நிராகரித்தும் மாகண சபை உறுப்பினரிடம் மகஜர்...
இலங்கையில் நீண்ட காலம் நிலவிய கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. யுத்தம், குண்டுவெடிப்பு, ஷெல் வீச்சு, உயிரிழப்புகளின் கணப்பீடுகள் என்ற சொற்பிரயோகங்கள் மாறி, நல்லிணக்கம், சமாதானம் என்ற வார்த்தைகள் உயிர் பெற்றுள்ளன. இரத்தம் தோய்ந்த நிலங்களில் வசந்தங்கள் வீசுவதாக மாயை. பிணக்குவியல்களின் மீது கொண்டாட்டாங்கள், சிறுவர்களின் சடலங்கள் மீது நல்லிணக்க பூங்காங்கள். அங்கு போர் நடைபெற்றதற்கான எந்தவித தடயமும் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல்...
சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் அகதிகளுக்கான இல்லம் துவங்கும் முடிவை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மண்டல நிர்வாகிகள் கைவிட்டுள்ளனர். யூரி மண்டலத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஹொட்டல் ஒன்றை அங்குள்ள புகலிடம்கோருவோர் 60 பேர் தங்கும் வகையில் அகதிகளுக்கான இல்லமாக மாற்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் யூரி நிர்வாகம், அந்த முடிவில் இருந்து பின்மாறுவதாக அறிவித்ததுடன், புகலிடம் கோருவோருக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்...
  அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் பக்ரி தற்போது மும்பையில் தங்கி இருந்து இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து தயாரான மெட்ராஸ் கபே இந்தி படத்தில் ஜான் அபிரகாமுடன் நடித்து இருந்தார். ராக் ஸ்டார், மெயின் தேரா ஹீரோ, ஹவுஸ்புல்-3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். நர்கிஸ் பக்ரியிடம் போலி கிரெடிட்...
  பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். மதுரை முத்துவின் மனைவி ஆறு மாதங்கள் முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததில் மன உளைச்சலில் இருந்த முத்து மீண்டு வந்து திருமணம் செய்தது மகிழ்ச்சியாகவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.