வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தாலும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரே தவிர எந்தவொரு நிழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என தென்மாகான முதலமைச்சர் ஷான் விஜேலால் கவலை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு நிகழ்விற்கும் அழைப்பு விடுப்பதில் பலனில்லை....
    இராணுவத்தினர் தனது கணவனை அரச பேருந்தில் அழைத்துச்சென்றதை பலர் கண்டு தனக்கு கூறியதாகவும், அவ்வாறு கணவருடன் அழைத்து செல்லப்பட்டவர்களின் தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் இராணுவத்தினரிடம் சரணடைந்த சாந்தகுமார் என்பவரது மனைவி வாசுகி சாட்சியமளித்துள்ளார். கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனது கணவர் ஆசிரியர் தொழில் செய்ததாகவும், விடுதலை புலிகளுக்கு பகுதி நேரமாக...
  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, குற்றப்புலனாய்வு பிரிவினரை நீதவான் கடுமையாக எச்சரித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு, இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வித்தியாவின் கொலை தொடர்பில் மற்றுமொருவரை கைதுசெய்யவுள்ளதாக, தாம் கடந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினரை மேற்கோள் காட்டி வெளியான செய்திகளை சுட்டிகாட்டிய நீதவான், நீதிமன்ற...
  மதுபான விடுதியில் அழகிகள் நடனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மராட்டிய அரசை விமர்சித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’ கருத்து தெரிவித்து உள்ளது. அழகிகள் நடனத்துக்கு தடை மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனம் நடந்து வந்தது. குறிப்பாக தலைநகர் மும்பையில் உள்ள மதுபான விடுதிகளில் நடன அழகிகளோடு வாடிக்கையாளர்கள் கும்மாளம் போட்டு வந்தனர். இதனை கலாசார சீரழிவாக அரசு கருதியது. இதனையடுத்து மராட்டிய போலீஸ்...
  கருணாவின் துரோகம்  விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார்.    கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவா பேச்சுவார்த்தைகளை...
ஓயாத அலை ஒன்றும் விடுதலைப்புலிகளின் வெற்றியும் வரலாற்றில் பதியப்படவேண்டிய களச்சமர்
  கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்று சுவிட்சர்லாந்தில் அரசியல் புகழிடம் பெற்றுள்ள 147 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கு வீசா அனுமதியை இலங்கையிலுள்ள சுவிஸ் அதிகாரிகள் பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அரசியல் புகழிடம் பெற்றுள்ளவர்களுள் முன்னாள் புலி செயற்பாட்டாளர் ஒருவரும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் கொழும்பிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவும் இணைந்து...
  யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் 90...
  வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் உள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து...