புத்தளம் , தில்ஹடிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரின் வீட்டில் இருந்து நேற்றைய தினம் இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சிலாபம், நாதன்டிய பிரதேச வீடொன்றில் இருந்து ரவைகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் காலி, அம்பலாங்கொடை பிரதேசத்தில் இந்த நாட்டில் தயரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான...
இலங்கை தேசிய சமாதான சபையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக இந்த மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.
மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்த கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எஸ்.பீ.திஸாநாயக்க சந்தேக நபரா என்பதை ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டிருந்த போதிலும் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
குறித்த சம்பவத்தின் சந்தேக நபர் யார் என கூறுமாறு...
உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட இணைப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்க உள்ளூராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் ஊடாக இந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.
குறித்த பிரிவு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களில் இ்டம்பெறுகின்ற பாரிய ஊழல் மற்றும்...
நாட்டைக் காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் நேற்று பங்கேற்று பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் நாடு தொடர்பில் பொறுப்பு காணப்படுகின்றது.
நாட்டை பாதுகாத்த மஹிந்த ராஜபக்சவை தொடர்ச்சியாக தாக்கக் கூடாது.
அனைவருக்கும் கௌரமான முறையில் மரணிக்க இடமளிக்க வேண்டும்.
கௌதம புத்தரின் உடன்பிறப்புக்கள் போன்று சிலர் நாடாளுமன்றில் கருத்து வெளியிடுகின்றனர்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு என்று ஒன்று...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை தாம் தடுத்து நிறுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவன்ட் கார்ட் வழக்குத் தொடர்பில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படவிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் அந்த விடயத்தில் தலையீடு செய்து கோதபாய கைது செய்யப்படுவதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கோதபாயவை கைது செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட புலிச்சந்தேகநபர்கள் 20 பேரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு பிரதான நீதவான் உத்தவிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட ஏனைய 18 பேர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைதாக வெளிப்பட்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் கடந்த சில மாதங்களாக இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் உரிமைகளை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் மாணவர்கள் விவகாரத்தில் மோசமாக...
இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது
இலங்கை ஸ்னைப்பர் பிரிவு இராணுவ வீரர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டு சில தினங்களில் இந்த இலங்கை இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாக குறித்த இராணுவ வீரரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த இலங்கை சிப்பாய் கைது செய்யப்பட்டதனை மாலைதீவு அதிகாரிகள் உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்னைப்பர் துப்பாக்கிகளுக்காக...