“கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது”
Thinappuyal -0
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது. அன்றைய தினம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மனித உரிமை செயற்பாட்டாளர் சர்மிளா, இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் சட்டமூலத்திற்கு எதிராக தான் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின் 15 வருடத்தினை நிறைவுசெய்தார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அசாம்ரைபில்ஸ் படைப்பிரிவினால் 10 மணிப்பூர் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் 2000 ம் ஆண்டு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை...
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து சற்று முன்னர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். குமார் குணரட்னம், அவுஸ்திரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் குமார் குணரட்னத்திடம் கோரியிருந்தது.
எனினும், தமக்கு இலங்கையில் அரசியல் செய்ய உரிமையுண்டு எனத் தெரிவித்து...
மண்சரிவு அபாயத்தினால் இறக்குவானையில் 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இறக்குவானை - மாதம்பை - இலக்கம் 2 பகுதியிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாதம்பை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 55 பாடசாலை மாணவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்குவதாக கொடக்கவெல பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மக்களுக்கு மாற்று இடங்களை...
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்தில் 5 ரஷ்யர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் 40 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்த...
வடபகுதி பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் எங்கே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்கங்களை கைப்பற்றி, அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கடந்த அரசாங்கம் கூறியிருந்தது.
கடந்த அரசாங்கம் தங்க ஆபரணங்களை உண்மையான உரிமையாளர்களிடம் கையளித்திருந்தாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர்களின் பெயர் விபரங்களுடன் தங்கத்தை கடந்த அரசாங்கம் களஞ்சியப்படுத்தியிருந்தாகவும் அவர்...
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது என பிபிசியிடம் அவர் கூறினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் சிதறியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 224 பேர் கொல்லப்பட்டனர்.
வெளிக் காரணிகளாலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கும் நிறுவனமான கொகலிமாவிய தெரிவித்திருந்தது.
ஆனால், இது மிகவும் அவசரமாக சொல்லப்பட்ட கருத்து...
எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 224 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே ரஷ்ய விமானத்தை ‘நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்மையில் அறிவித்திருந்தனர். மேலும் வானில் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியற்கான...
கடந்த 2011 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் 54 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் (46) புகைப்படங்களை, பல்வேறு வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, தனது மனைவி கோல் கேர்ள் என்று இந்த இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் பதிவு செய்வோருடன் பேரம் பேசி, தனது மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைத்து, இதன்மூலம் லட்சக்கணக்கான பவுண்ட் பணத்தை சம்பாதித்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் மீது பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர்...
இந்தோனேஷியாவில் கிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குழுங்கின. பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூட்டு வலியை சரிசெய்ய கூடியதும், சிறுநீர் பெருக்கியாகவும், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது, தாய்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது, சீத கழிச்சல், மூலத்துக்கு மருந்தாக இருப்பது ஆளி விதை.
ஆளி விதை பல்வேறு நன்மைகளை கொண்டது. இது அற்புதமான மருந்தாகி, உள் உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. உயிரணுக்களை அதிகப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. ஆளி விதை உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இது சிவப்பு அரிசியை போன்று...