இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதை சீனாவின் பிரதமர் லீ கெகியாங் வாழ்த்தியுள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில், "பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை மற்றும் புதிய அரசின்கீழ் இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் மிகவும் வெற்றிகரமான நிலையை எட்டும்'' என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- "சீனாவும் இலங்கையும் காலத்தைக் கடந்த நல்ல நண்பர்கள். இருதரப்பும் தந்திரோபாய ஒத்துழைப்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளன. இது நேர்மையான...
பொதுத்தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப் பட்டியலுக்கான உறுப்பினர்கள் பெயர் விவரத்தை நேற்று அறிவித்தது. அதில் தேசியப் பட்டியல் தமிழ் வேட்பாளர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. ஐ.தே.க. தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், ராம் ஆகியோருக்கு கடைசிநேரத்தில் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆசனங்களை வென்ற தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியாவது வழங்கப்படவில்லை....
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நாட்டின் பிரதான இரண்டு கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மூவின மக்களினதும் ஆதரவை பெற்ற பிரதான இரண்டு கட்சிகள் இணக்கப்பாட்டுடன் கூடிய, நாட்டின் முன்னேற்றத்தை கொண்டு செயற்பட உத்தேசித்துள்ளன. இத்தருணத்தில் 13 திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவதில் அக்கறை செலுத்த...
  உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு தடவை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ள நிலையில் இனவிடுதலைக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனது வெற்றிக்காகவும், கூட்டமைப்பின் பெருவெற்றிக்காகவும் ஆதரவளித்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தனது வெற்றிக்காக ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு...
  அரசியலில் இருந்து  நான் ஒதுங்கப்போவதில்லை மக்களுக்கான சேவை தொடரும்-முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்  சிவநாதன் கிஷோர்
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்தாலும் தேசியப்பட்டியலில் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என மட்டக்களப்பு தமிழ் மக்களை ஏமாற்றி திரிந்த பிள்ளையானுக்கு தேசிய பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. தனக்கு தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரிடம் பிள்ளையான் கெஞ்சிய போதிலும் பிள்ளையானின் கெஞ்சலை அவர்கள் கணக்கில்...
  மிகச் சொற்ப வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்த தென்மராட்சி வேட்பாளர் திரு.க.அருந்தவபாலனுக்கு தேசியப்பட்டியல் மூலம் இடம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசாவிடம் தென்மராட்சி பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அத்துடன் கூட்டமைப்பின் தலைவருக்கான வேண்டுகோள் மகஜரையும் அவர்கள் மாவை சேனாதிராசாவிடம் கையளித்தனர். வேட்பாளர் அருந்தவபாலனின் அதிசயக்கத்தக்க இறுதி நேரத் தோல்வி அறிவிப்பு தென்மராட்சி மக்களிடையே பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள்,...
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மலித் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 12...
  தேசியப்பட்டியல் மூலம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனைத் தொகுதிக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்படுகின்றது. இந்தப் பேராட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் முற்பகல் 10 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏகாம்பரம் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்....
  ரணில் வி்க்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னார் பிரதமரான பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பி்டத்தக்கது. மஹிந்த உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பங்கேற்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பஙகேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது. நிகழ்வின் முன் வரிசை ஆசனமொன்றில்...