இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின் போது, மஹிந்த- சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த- மைத்திரி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. // Religious leaders first: Ranil Showwww.sonakar.comMember video Posted by Sonakar.Com on Friday, August 21, 2015 இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, மஹிந்த அரசினால் கைது செய்யப்பட்டு அவரது உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் மைத்திரி அரசாங்கம் அவருக்கான அனைத்து கௌரவங்களையும் மீள வழங்கி பீல்ட் மார்ஷல்...
  தாய்லாந்து நாட்டில் மனித மாமிசம் செய்த உணவகம் போலிஸ் ரைடில் சிக்கியது
  உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னஜ் மாவட்டத்தில்தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் ஒரு சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், “காலை 11 மணியளவில் எங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த 6 பேர், பணம் மற்றும் நகையைக் கேட்டு மிரட்டி எங்களைக்...
  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆரவை தந்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளனர். இந்த வகையில் வாக்களித்த மக்களுக்கும் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைத்து...
தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவு அணியினரின் முடிவே இதுவென்று தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் எதிரணியில் இருந்தபடி செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவுடன் கைகோர்த்து எதிரணியில் செயற்படுவதற்கு 60 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தயாராகவே இருக்கின்றனர்...
தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிலைச் சின்னத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ள அவர்: எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
ரணில் வி்க்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னார் பிரதமரான பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பி்டத்தக்கது. மஹிந்த உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பங்கேற்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பஙகேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது. நிகழ்வின் முன் வரிசை ஆசனமொன்றில்...
    நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின் சடலத்தை கண்டு நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.   அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.   தாய் சிசுவை பிரசவித்தவுடேனே இவ்வாறு தேயிலைப்பகுதியில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   சிசுவின் சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு...
  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தலைமையில் 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கம்...
  யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலானது உண்மையாகவும் நேர்மையாகவும் நடை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்துக் கூறிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் -...