இலங்கையில் 17.08.2015 அன்று நடைபெற்ற 15 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம், வன்னித் தேர்தல் தொகுதி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் பலத்த ஆதரவினைப்பெற்று 14 ஆசனங்களை வெற்றி கொண்டு மேலதிகமான இரண்டு போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. எனவே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், அவர்களுக்கான முழுஆதரவினையும் வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் வன்னியில் இருந்து...
      முழு பெயர் குமார சங்கக்கார 27 அக்டோபர் 1977 இல் பிறந்தார் (வயது 37) பிறந்த இடம்- மாத்தளை. இலங்கை புனைப்பெயர் சங்கா உயரம் 5 அடி 10 (1.78 மீ) துடுப்பாட்டம் இடது கை பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு விக்கெட் காப்பளர், துடுப்பட்ட வீரர் 20 ஜீலை 2000ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போடடியில் அறிமுகமானார் சங்கக்காரா தற்போது 15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 133 போட்டியில் 231 இன்னிங்ஸ்ல்12350 ஓட்டங்களையும்...
சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர். சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது. நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் கோத்தபாய தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை போன்றே தோல்வியையும் ஏற்று கொள்ளும் அவர், நாட்டை நேசிக்கின்ற தலைவராக பலர் மனங்களில் இருக்கின்றார். அத்துடன் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து...
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றமைக்காக மதிப்புக்குரிய இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கும் தமிழ்மக்கள் அரசியற் தீர்வொன்றை எட்டுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். அத்தோடு சிறி லங்கா அரசுக்கும் பன்னாட்டுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தங்கள் தலைமை என்பதை உறுதிபடக் கூறியுள்ளனர். நீண்டகாலத் தமிழர்...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை 2 வது டெஸ்ட் போடடிக்கு தீவிர பயிற்சி என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலி தெரிவிப்பு மேலும் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் குமார் சங்கக்காராவிற்கு விடை கொடுக்க இரு அணியினரும் காத்திருக்கின்றனர். மேலும் பல நாடுகளின் முன்னால் அணித்தலைவர்களும் ஓய்வு பெற்ற வீரர்களும் சங்கக்காராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  சங்கக்காராவின் இறுதி சர்வதேச போட்டி என்றதால் வெற்றியுடன் சங்காவை வழியனுப்ப...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில் ஆலயத்தின் வெளிவீதியை பக்திமயமானதாக வைப்பதற்கு அடியார்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள், அந்தணர்கள் மற்றும் அனைவரது ஒத்துழைப்பினாலும் காலம் காலமாக இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு...
தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் சட்ட மீறல்களில் ஈடுபட்ட 63 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட 23 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வாக்களித்தவர்கள், சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், வாக்காளர்களை அச்சுறுத்தியவர்கள், அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  
அம்பாறை மாவட்டத்தில் பாலைமுனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியூதினின் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இம் மோதலின் போது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இருவரும் இதுவரையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் நிறைவடைந்த பின்னர் இதுவரையில் பதிவாகிய மிக பெரிய வன்முறை சம்பவம் இதுவென கபே அமைப்பு தெரிவித்துள்ளது.