தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தமிழனின் முகவரியை தரணி அறியச் செய்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்,  Published on Nov 26, 2012 So far, Thousands of LTTE freedom fighters have sacrificed their lives for the advancement of the Tamil Eelam liberation struggle and for drawing world attention to it. The courageous death of each and every...
மேற்குவங்க மாநிலத்தின் பரிபுர் என்ற கிராமத்தி சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், பெற்றோர் இக்குழந்தையை பிரம்மனின் மறுபிறவி என்று கூறிக்கொள்கின்றனர். மேலும், அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்களும், இது பிரம்மனின் மறுபிறவி என்று சூடம் ஏற்றி இக்குழந்தையை வழிபடுகின்றனர். ஆனால், இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தாயின் வயிற்றில் இரட்டை குழந்தை உருவாகியதில் ஒரு குழந்தை இறந்துவிட்டதால்,...
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர். ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்புடன் இணைந்து ஜே.வி.பி. யினர் மேற்கொண்ட குறித்த பேரணி நேற்று மாலை மருதானை ஆனந்த கல்லூரி அருகில் ஆரம்பித்து, புறக்கோட்டை பரடைஸ் மைதானத்தில் முடிவடைந்திருந்தது. இதில் சுமார் பத்தாயிரம் பேரளவில் கலந்து கொண்டிருந்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம், சர்வாதிகார ஆணவம் வேண்டாம், போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். குறித்த...
தாயகத்தில் சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்கலையும் மீறி தமிழீழ  தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று  இடம்பெற்றது. கூடவே புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும்  வெகு எழுச்சியாக கொண்டாடப்பட்டன. தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி கொளுத்தி, கேக் வெட்டிப் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டுள்ளது.   தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி கொண்டாடப்படுவது வழமை. இம்முறையும் அது வடக்கு கிழக்கில்  கொண்டாடப்படலாம்...
  சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மீது பாலியல் ரீதியான இம்சைகள் மேற்கொள்ளப்பட்டமை நிரூபணமாகியதைத் தொடர்ந்தே அந்தப் பகிடிவதையில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது என உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தார். பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டில் சகதி நிறைந்த குழிகளைத் தோண்டி புதிய மாணவ, மாணவியரை அரை நிர்வாணமாக்கி அந்தக் குழிகளில் இறக்கி சேற்றால்...
இரண்டு திரைகளைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியான YotaPhone கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் YotaPhone 2 இனை வடிவமைப்பது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி லண்டனில் வெளியிடப்படவுள்ளது. இதன் திரையானது 4.7 அங்குல அளவுடையதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், முன்னர் வெளியாகிய YotaPhone ஆனது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய AMOLED திரையினையும், Quad Core...
இணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு Whisker எனும் வயர்லெஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சாதமானது 4 மைல்கள் தொலைவிற்கு சமிக்ஞையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 வருடங்களுக்கு செயல்படக்கூடிய இரண்டு AAA மின்கலங்களையும் உள்ளடக்கியுள்ளது. இச்சாதனைத்தைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து வீடுகள், ரோபோக்கள், கார்கள், செல்லப் பிராணிகள் என்பவற்றினை கண்காணிக்க முடியும். தற்போது நிதி திரட்டலினை எதிர்பார்த்து Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச்சாதனம் விரைவில் விற்பனைக்கு வருகின்றது
அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 மற்றும் 6 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்த சில மாதங்களிற்கு பின்னர் அவற்றில் பயன்படுத்தக்கூடிய MOBA Vainglory ஹேமினை தரவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னர் இக்ஹேமானது தென் ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சில இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் தற்போது iTunes App Store தளத்திலிருந்து அனைவரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இதனை விளையாடும் குழுக்களின் அங்கத்தவர்கள்...
தூக்கமின்மை என்பது அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாக உள்ளது.இதை, சரி செய்ய பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். அவ்வாறு முயற்சி செய்து கொண்டிருப்போர்களுக்கு இதோ ஐந்து உணவுகள். இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம். செர்ரி பழங்கள் நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுபடுத்தும் ஒரு வகையான உயிரியல் கடிகாரமானது நமது தூக்கத்தையும்...
சயீட் அஜ்மலின் பந்துவீச்சு பலவித பயிற்சிகளுக்கு பிறகும் சர்வதேச போட்டிகளில் வீசும் அளவுக்கு சரியானதாக வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பாக பந்து வீசுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலவித முயற்சிகளை எடுத்தது. இதற்காக...