நடிகர் சங்க கட்டடப்பிரச்னை பற்றி விவாதிக்க அவசர செயற்குழு கூட்டம் 16ந் தேதி நடக்கிறது…

365

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ந் தேதி கூடுகிறது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இவர்கள் தவிர ஸ்ரீகாந்த், சிம்பு, நளினி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக நடந்து வரும் வழக்கு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. சங்க கட்டட நிதிக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு, சிம்பு படம் நடித்து கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதை செயல்படுத்துவதா வேண்டாமா? என்பது குறித்தும் விவாதிக்கிறார்கள். அதோடு புதிதாக சினிமாவில் நடிக்க வருகிறவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதுகுறித்தும் பேசப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கத்தின் பொதுக்குழு நடந்தபோது எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது. அது கடும் விமர்சனத்தை கிளப்பியது. அதோடு நடிகர் சங்கத்திற்கு எப்போது தேர்தல் நடந்தாலும் விஷால் தலைமையில் இளம் நடிகர்கள் போட்டியிட தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் கூடும் இந்த அவசர செயற்குழு முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

SHARE