பரபரப்பாகும் தேர்தல் களம் – பிரதான நகரங்களில் குவிக்கப்படும் கலகத்தடுப்பு பொலிஸார்

368
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலம் செல்லும் வரையில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் கலகத் தடுப்புப் பொலிஸார் நிலைநிறுத்தப்பட உள்ளனர்.

சுமார் 150 கலகத் தடுப்புப் பொலிஸ் குழுக்கள் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

50 முழு அளவிலான கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவுகளும், சிறு அளவிலான கலகத் தடுப்புப் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியிட்டதன் பின்னர் ஏற்படக் கூடிய கலகங்களை தடுக்கவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இவ்வாறு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இது தொடர்பில் ஏற்கனவே பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பிரச்சினைகள் ஏற்படக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

SHARE