பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க

355
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட இராணுவ பதவி பட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பன மீண்டும் வழங்கப்பட உள்ளன.

இவற்றை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

0_135373064038_news

 

SHARE