மகிந்த வரலாற்றில் அழிக்க முடியாத தோல்வியை சந்திப்பார்!– ராஜித சேனாரத்ன

144

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Mahinda-depature

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் வென்றால் தான் பிரதமர் என மகிந்த கூறுகிறார். அவர் தேர்தலில் வெல்ல மாட்டார். இதுதான் உண்மை.

இதனால், அவருக்கு பிரதமர் பதவியல்ல, அவர் வீதியில் இறங்கி செல்ல முடியாதளவுக்கு மக்களால் நிராகரிக்கப்படுவார்.

இறுதியில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவமான மரியாதையையும், பாதுகாப்பையையும், சிறப்புரிமைகளையும் அவர் இழக்க நேரிடும்.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப் பெறாது என்பதால், கிடைக்காத பிரதமர் பதவி குறித்து அலட்டிக்கொள்ள வேண்டாம் என குருணாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றிப்பெற முடியாது என்று அறிந்தும் பிரதமர் பதவி பற்றிய கனவுடன் மக்களை தவறாக வழி நடத்தும் மகிந்த ராஜபக்சவுக்கு இறுதியில் வரலாற்றில் அழிக்க முடியாத தேர்தல் தோல்வி ஏற்படும்.

இது பற்றி அறிந்தும், வெட்கமின்றி பிரதமர் பதவியை கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பும் அளவுக்கு மகிந்த ராஜபக்ச நாணயமற்ற நபராக மாறியுள்ளார். மகிந்த ராஜபக்ச பதவி பேராசையில் இருந்து வருகிறார்.

தான், தனது குடும்பத்தினர் மற்றும் சகாக்களின் தவறுகளை மூடிமறைக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பெற்று அதனை ஆபரணமாக பயன்படுத்தும் தோல்வியான முயற்சியில் மகிந்த ஈடுபட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச இந்தளவுக்கு வங்குரோத்தான நபராக மாறியுள்ளமை தொடர்பில் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.

ஜனவரி 9 ஆம் திகதி மக்களின் ஆணைக்கு தலைவணங்கி அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாக மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

மக்களின் ஆணைக்கு தலைவணங்கினால், ஏன் தேர்தலுக்கு வந்தார்?. பதவி பேராசையும் தவறுகளையும் நோக்கமுமே இதற்கு காரணம் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் வென்றால் தான் பிரதமர் என மகிந்த கூறுகிறார். அவர் தேர்தலில் வெல்ல மாட்டார். இதுதான் உண்மை.

இதனால், அவருக்கு பிரதமர் பதவியல்ல, அவர் வீதியில் இறங்கி செல்ல முடியாதளவுக்கு மக்களால் நிராகரிக்கப்படுவார்.

இறுதியில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவமான மரியாதையையும், பாதுகாப்பையையும், சிறப்புரிமைகளையும் அவர் இழக்க நேரிடும்.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப் பெறாது என்பதால், கிடைக்காத பிரதமர் பதவி குறித்து அலட்டிக்கொள்ள வேண்டாம் என குருணாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றிபெற முடியாது என்று அறிந்தும் பிரதமர் பதவி பற்றிய கனவுடன் மக்களை தவறாக வழி நடத்தும் மகிந்த ராஜபக்சவுக்கு இறுதியில் வரலாற்றில் அழிக்க முடியாத தேர்தல் தோல்வி ஏற்படும்.

இது பற்றி அறிந்தும், வெட்கமின்றி பிரதமர் பதவியை கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பும் அளவுக்கு மகிந்த ராஜபக்ச நாணயமற்ற நபராக மாறியுள்ளார். மகிந்த ராஜபக்ச பதவி பேராசையில் இருந்து வருகிறார்.

தான், தனது குடும்பத்தினர் மற்றும் சகாக்களின் தவறுகளை மூடிமறைக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பெற்று அதனை ஆபரணமாக பயன்படுத்தும் தோல்வியான முயற்சியில் மகிந்த ஈடுபட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச இந்தளவுக்கு வங்குரோத்தான நபராக மாறியுள்ளமை தொடர்பில் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.

ஜனவரி 9ம் திகதி மக்களின் ஆணைக்கு தலைவணங்கி அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாக மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

SHARE