முஸ்லீம் சமுதாயத்தினரைக் காப்பாற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுங்கட்சியினை தூக்கியெறிந்தார்-(வீடியோ இணைப்பு)

561

 

DSC08548  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் அதேநேரம் முஸ்லீம் மக்களுக்கு இவ்வரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகளை அவதானித்துவந்த ரிசாட் பதியுதீன் குறிப்பாக அநுராதபுரம், தம்புள்ளை, திருகோணமலை போன்ற இடங்களில் இடம்பெற்ற பள்ளிவாசல்கள் உடைப்புச் சம்பவங்கள், 300இற்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களுக்கெதிரான குற்றச்செயல்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு ஏற்றதருணத்தில் சிறந்த தீர்வினை மேற்கொண்டுள்ளார். மின்னல் நிகழ்ச்சியில் ரிசாட் பதியுதீனை விமர்சித்த ஸ்ரீரங்காவின் வாய்க்கு பூட்டுப்போட்ட சம்பவமாக இது திகழ்கிறது.

தொடர்ந்துவந்த அரசாங்கங்களுள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே முஸ்லீம் மக்களுக்கு பாரிய அநீதிகளை இழைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து முஸ்லீம் காங்கிரஸ் என்ன தீர்வினை மேற்கொள்ளப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. தன்மானமுள்ள முஸ்லீம்கள் எவரும் இவ்வரசாங்கத்தினால் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்காக அவர்கள் அரசுடன் ஒத்துப்போகமாட்டார்கள் என்பதனையே ரிசாட் பதியுதீன் ஆளுந்தரப்பிலிருந்து விலகியுள்ளமை எடுத்துக்காட்டுகின்றது. இதிலிருந்து ஏனைய முஸ்லீம் பிரதிநிதிகளும் ஒரு பாடத்தினை கற்றிருப்பார்கள் என்பது தெளிவான உண்மை.

யார் தான் கட்சியை விட்டு விலகினாலும் அஸ்வர் அவர்கள் அரசிலிருந்து விலகுவார் என்பது சந்தேகம் தான். மஹிந்தவின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்பட்ட ரிசாட் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதிக்கு துரோகம் செய்தார் என்று கூறமுடியாது. முஸ்லீம் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தினைக் காப்பாற்றும் நோக்கிலேயே இவரின் கட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தக் கோப்பினைத் தூக்கப்போகிறாரோ ஜனாதிபதி மஹிந்த அவர்கள் என்பதும் கேள்விக்குறியாகவிருக்கின்றது.

SHARE