வடக்குக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக்கு எதிராக வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று யாழ்ப்பாண ஆயர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வெளிநாட்டவர்களுடன் புலம்பெயர்ந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
காலத்துக்கு காலம் அரசாங்கம் தமது கொள்கைகளை மாற்றி வருகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தமது உறவுகளை பார்க்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தடை தேவையற்ற ஒன்றாகும். சுதந்திரமான நடமாட்டத்துக்காக இந்த பயணத்தடை நீக்கப்பட வேண்டும் என்று ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார்.