வடக்கு மீன்பிடி அமைச்சர்…கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது, இக்கருத்தமர்வில் சர்வதேச ரீதியில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

158

 

தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல்வளங்கள் அழிந்து வருகின்றது.

இக்கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது, இக்கருத்தமர்வில் சர்வதேச ரீதியில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தமர்வில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாளும் நாடுகளில் இலங்கை முக்கிய இடம் வகிப்பதால், இலங்கையின் பிரதிநிதியாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார், அமெரிக்காவின் மிக முக்கிய மீன்பிடி துறைமுகங்களான அலபாமா, லோசெஞ்சல்ஸ், கலிபோனியா, வோசின்க்டன், மெயிலாண்ட், போஸ்டன், சந்டாரூஸ் தீவு, அனகாப்பா தீவு, போன்ற இடங்களுக்கும் சென்று இயற்க்கை பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

கடல் வாழ் உயிரனங்களின் பாதுகாப்பு தொடர்பான கருத்தமர்வில் எமது நாட்டு வட மாகாண அமைச்சர் அமெரிக்க அரசால் அழைக்கப்பட்டு கலந்து கொண்டமை மிக முக்கிய விடயமாகும்.Denis 1Denis

 

 

SHARE