அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை முன்னெடுப்பு

102

 

பாறுக் ஷிஹான்

அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியினூடாக மாடுகள் கடத்தப்படுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலாலுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரு சந்தேக நபர்களுடன் 1 எருமைமாடு உள்ளடங்கலாக 4 மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது கடந்த 17.08.2022 மேற்கொள்ளப்பட்டதுடன் சந்தேக நபர்களான களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட போரைதீவு பகுதியை சேர்ந்த 50 மற்றும் 52 வயதுடையவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் குறித்த 4 மாடுகள் தொடர்பில் தொடர்விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர் மீட்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் தொடர்பாகவும் மீட்கப்பட்ட மாடுகள் கடத்தப்பட்டு எடுத்து வரப்பட்டனவா? என பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE