அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கவலை

354
glஐ.நா.வில் இலங்கை தன்னை நியாயப்படுத்த பெருமளவு பணத்தை செலவிடுகிறது!- பீரிஸ் கவலை
தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்  கவலை தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடந்து உரையாற்றுகையில்,

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கும் கடற்கொள்ளைக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பல கப்பல்களை கடத்தியுள்ளனர்.

அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பொருட்டு உலகின் எந்த நாடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியையோ அல்லது பயிற்சியையோ வழங்கக் கூடாது.

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக நேரத்தையும், பணத்தையும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது என்றார்.

 

SHARE