அரசியலில் பெண்களின் பங்களிப்பு வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர்

221

அரச துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதனைப் போன்று அரசியலிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது மிக அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(17) நடைபெற்றது.

மேலும், உள்ளூராட்சி தேர்தல்களின் போது தமிழ் மக்கள் சார்ந்த பிரதிநிதிகள் மிகக் குறைவாக காணப்படுகின்றனர்.

இதனால் “பெண்களின் பங்களிப்பினை ஊக்குவிப்பது, மேம்படுத்துவதும்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையில், வட மாகாணத்திலே யாழ் மாவட்டத்தில் பெண்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அரசியலில் அவர்கள் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் உள்ளூராட்சி தேர்தல்களின் போது அரசியல் மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்திகளில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், உள்ளூராட்சி தேர்தல்களின் போது பெண்களின் பங்களிப்பு மிக குறைவாக இருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலின் போது பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அந்தவகையில் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள பெண்கள் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து தங்களது பங்களிப்பினை அதிகரித்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE