ஆண் குழந்தைக்கு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்!

153

 

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே – ராதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரஹானே மற்றும் ராதிகா தம்பதிக்கு ஆர்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இந்த தம்பதிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ரஹானே நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

இன்று காலை நானும், எனது மனைவியும் அழகான ஒரு ஆண் குழந்தையினை இந்த உலகத்திற்கு வரவேற்றுள்ளோம். எனது மனைவி ராதிகாவும், எங்களது குழந்தையும் மிகவும் நலமாக உள்ளனர். உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள்’ என தெரிவித்துள்ளார்.அதே போல் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹானே வெளியிட்டுள்ளார்.

SHARE