ஆறு நாட்கள் கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்

156

 

டொலர் பிரச்சினை காரணமாக கடந்த ஆறு நாட்களாக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 12ம் திகதி இந்த மசகு எண்ணெய் கப்பல் இலங்கை கடற்பரப்பை வந்தடைந்துள்ளது.பணம் செலுத்துகையில் ஏற்பட்டுள்ள தாமத நிலையினால் மசகு எண்ணெய் தரையிறக்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.இவ்வாறு உரிய நேரத்தில் பணம் செலுத்தாத காரணத்தினால் தாமதக் கொடுப்பனவுகளையும் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கோரிக்கை
கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்
இந்த கப்பலில் சுமார் ஒரு லட்சம் மெற்றிக் தொன் எடையுடைய மசகு எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டில் கியூ.ஆர் முறையில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும், 3000 மெற்றிக் தொன் பெட்ரோலையும் விநியோகம் செய்கின்றது.

இந்தியன் எண்ணெய் நிறுவனம்
இந்தியன் எண்ணெய் நிறுவனம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும், 300 மெற்றிக் தொன் பெட்ரோலையும் விநியோகம் செய்கின்றது என பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE