மதுரை நோக்கி 09.01.2016 காலை 7.30 அளவில் புறப்படவிருந்த மிஹின் லங்கா விமானத்தில் எலியைக் கண்டதாக பயணி ஒருவர் தெரிவித்ததையடுத்து விமானம் ஆறு மணி நேரம் தாமதித்துப் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
என் 3001 எனும் இலக்க விமானத்திலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளதுடன் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் எலி கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாக விமான சேவை நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.