இங்கிலாந்து சென்று விரைவில் நாடு திரும்பும் சந்திரிக்கா

227

இங்கிலாந்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாளைய தினம் நாடு திரும்ப உள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவே இவர் விரைவில் நாடு திரும்ப உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள சந்திரிக்கா எதிர்ப்பார்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் வைத்தே இந்த சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப் பத்திரம் தொடர்பிலான கோப் அறிக்கை மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,இந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுடன் சந்திரிக்கா கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10-1-2

SHARE