இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச், சிட்சிபாஸ்

98

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச், அமெரிக்க வீரரான டாமி பாலுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷிய வீரர் காரென் கச்சனாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 7-6, 6-4, என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-6 என கச்சனாவ் கைப்பற்றினார். 4வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி  இறுதிக்கு முன்னேறினார்.

maalaimalar

SHARE