உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டொலர் நிதியுதவி

125

 

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ரஷ்யா போரை தொடுத்து வருகின்றது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசர கால ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைனுக்கு வழங்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கேட்டுக் கொண்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்று உக்ரைனுக்கு 12 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 12 பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE