உக்ரைனுக்கு வாரிவாரிக்கொடுக்கும் அமெரிக்கா!

96

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்(joe biden )நிர்வாகம் உக்ரேனுக்குக் கூடுதல் ராணுவ உதவியை வழங்குவதற்கு ஆயத்தமாகிறது என்று சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.

அதுகுறித்துக் கூடியவிரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழங்கப்படவுள்ள ராணுவ உதவியின் மதிப்பு, தற்போது சுமார் 800 மில்லியன் டாலர் என தெரியவந்துள்ளது.

ராணுவ ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்புவதுகுறித்து அடுத்தவாரம் அறிவிக்கப்பட்டால், அதன் மதிப்பு மாறக்கூடும்.அமெரிக்காவிடம் மிகுதியாக இருக்கும் ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர்களுக்கு உரிமையுண்டு.அந்த உரிமையைப் பயன்படுத்தி அதிபர் பைடன் உக்ரேனுக்கு அவற்றை அனுப்பவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவரை வாஷிங்டன் உக்ரைன் அரசாங்கத்துக்குப் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான உதவியை வழங்கியுள்ளது.

SHARE