அம்பாறை பிரதேசத்தில் உயர் தர பரீட்சை நிறைவடைந்து வீட்டுக்கு செல்லும் வழியில் பாடசாலை மாணவியொருவர் கடத்திச்செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சிலர் இவ்வாறு பலவந்தமாக குறித்த மாணவியை கடத்தி சென்றுள்ள நிலையில் ,பின்னர் மாணவி முச்சக்கரவண்டியினுள் இருந்து பாய்ந்து தப்பியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் மற்றும் வீதியின் அருகில் இருந்த சில நபர்கள் இணைந்து குறித்த சிறுமியை காப்பாற்றியுள்ள நிலையில் , கடத்தலில் ஈடுபட்ட நபர்களையும் அவர்கள் பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவிக்கும் மற்றும் கடத்துவதற்கு முயற்சித்த நபருக்கும் இடையில் காதல் தொடர்பொன்று இருந்துள்ள நிலையில் , மாணவி அத் தொடர்பை கைவிட்டதால் இவ்வாறு கடத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியினுள் இருந்து இரசாயன திரவ போத்தல் ஒன்றும் ஆடைகள் பையொன்றும் மற்றும் கத்தியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.