எதைப் பேசுகிறோம் என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துவிட்டு ஆயர் பேசினால் நல்லது”
அப்படிப் போடு அருவாளை. ஒரு வசந்தராசா தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவராக (இது ஒரு பொம்மைப் பதவி. கயிறு கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரனிடம் கைகளில் உள்ளது.அவர்கள்தான் இந்த பொம்மலாட்டத்தை திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆட்டுகிறார்கள்) சேர்ந்து கொண்டால் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளார்கள் என்று சொல்ல முடியுமா?
இது வடக்கு கிழக்கு மாகாணங்களின் உறவைப் பலப்படுத்தப் பேருதவியாக அமையுமா அல்லது பிளக்க உதவுமா?
எச்சந்தர்ப்பத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்து நின்று செயற்படக்கூடாது. நாம் தனித்தனியாக இயங்குவோமாயின் அது எமது ஒற்றுமைப் பலத்தைச் சிதைத்துவிடும் என்று ஆயர் சொல்வது சரியா? .
வசந்தராசா கிழக்கில் உள்ள மக்களில் எத்தனை பேரை பிரதிநி்த்துவப் படுத்துகிறார்? ஒரு சிவில் அமைப்பில் இருந்துவிட்டால் அவர் ஒரு மக்கள் பிரதிநிதியா?
கிழக்கில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 11 மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் கிழக்கு மாகாண மக்களை பிரதிநித்துவப் படுத்தும் பிரதிநிதிகள். வசந்தராசாவோ அல்லது ஆயர் யோசேப் பொன்னையாவோ அல்ல. எதைப் பேசுகிறோம் என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துவிட்டு ஆயர் பேசினால் நல்லது. இந்த அமைப்பு தேர்தலில் தோற்றவர்களாலும் ததேகூ இன் தேசியப்பட்டியல் மூலம் நா.உறுப்பினர்களாக வர முடியாது போனவர்களாலும் உருவாக்கப்பட்டது.
இது தமிழ் இனத்தை கூறு போட உதவுமே அல்லாது ஒற்றுமைப்படுத்த உதவாது. இதுதான் உண்மை