எனது பார்வையில் இது நாட்டிற்கு ஒரு சோகமான நாள்! ஜோ பைடன்

139

 

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

இனி கருக்கலைப்பு உரிமை விவகாரத்தில் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது,

“இது என்னை திகைக்க வைக்கிறது, இந்த முடிவால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். “இது எனது பார்வையில் நாட்டிற்கு ஒரு சோகமான நாள் ஆனால் சண்டை முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல என கூறினார்.

SHARE