கனடாவில் உச்சம் தொட்ட பணவீக்கம்

108

 

கனடாவில் பணவீக்க வீதம் உச்சம் தொட்டுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வருடாந்த பணவீக்க வீதம் நான்கு தசாப்த காலங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் நுகர்வோர் விலைச் சுட்டியானது கடந்த ஆண்டு மே மாதத்தை விடவும் 7.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.

எரிசகத்தி வளங்களின் விலைகள் 34.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பெற்றோலின் விலை 48 வீத்த்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்பட்டு இந்த தகவல்களை புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போர் காரணமாக கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் 9.7 வீதமாக உயர்வடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.

SHARE