கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் திவிநெகும அதிகாரிகள்

234
கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பாத யாத்திரையில் அதிகளவில் திவிநெகும அபிவிருத்தி அதிகாரிகளே கலந்து கொண்டதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரைக்கு தலைமையேற்று செயற்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் திவிநெகும அதிகாரிகள் என புலனாய்வு பிரிவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கிய அறிக்கையில் கூறியுள்ளனர்.
பிரதேச மட்டத்தில் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் குறைந்த எண்ணிக்கையிலான கமத்தொழில் ஆய்வு அதிகாரிகளே பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
அரச அதிகாரிகளாக பணியாற்றி வரும் நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பாத யாத்திரை ஒன்றுக்கு தலைமையேற்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை எஸ்.பி. திஸாநாயக்கவின் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் 15 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பாத யாத்திரையில் கலந்து கொண்டதாகவும் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
SHARE