கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்

85
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பினால் 8 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 9,000 மெற்றிக் தொன் யூரியாவுடனான கப்பல் இன்று (02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பெரும்போக நெல் உற்பத்திக்கு தேவையான உரம் அதாவது, விசேட வகையான உரம் Miuriate of Potash (MOP) அல்லது பண்டி உரம் 41,876 மெற்றிக் தொன் உடனான கப்பல் இன்றிறவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உரத்தை நாளை மாலை இறக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக கெமர்ஷல் உர நிறுவனத் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.

இந்த உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

SHARE