சர்வதேச அணுகுமுறைகளும் கொரோனா வைரஸ் தாக்கமும்

407

இன்று உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வந்தாலும் இதே சர்வசேத அரங்கில் ஒரு வியாபார தந்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீற்றோபவர் கொண்ட நாடுகளை பொறுத்தவரையில் ஆசிய பிராந்தியத்தில் இருக்கக்கூடிய நாடுகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் பிரதான நோக்கம். அந்த வகையில் அமெரிக்காவை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் நானே சர்வதிகாரி என்று இருந்த காலம் மாற்றம் பெற்று தற்பொழுது நாட்டின் சர்வதிகாரியாக சீனா தன்னை தயார்ப்படுத்தி வருகிறது. 95 சதவீதமான கொரோனா மருந்து வகைகள் தடுப்பூசிகள் அதற்கான அங்கிகள் என பலகோடி மில்லியனை சீனா தற்போதைய சூழ்நிலையில் சம்பாதித்து வருகிறது. சீனாவை பொறுத்தவரையில் தற்பொழுது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால் ஏனைய நாடுகளில் தொடர்ந்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருவதை பார்க்கும் பொழுது சீனா அரசாங்கம் திட்டமிட்டே அதனை செய்துவருகிறது எனலாம். வுகான் நகரத்தில் நடந்த சம்பவங்களை உற்று நோக்கும் பொழுது எவ்வாறு இந்த கொரோனா வைரஸ் அனுப்பப்பட்டது என்ற விவரம் தற்பொழுது அறிப்பட்டிருக்கிறது. சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் அதனை சீர் செய்வதற்கு பல நாடுகள் இன்று சீன அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கிறது. சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஒருவருக்கு இருக்கும்பட்சத்தில் அதனுடைய உச்சபட்ச தாக்கம் கொரோனா வைரஸாக மாறுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோகும் சூழ்நிலையும் உருவாக்கப்படுகிறது. இந்த கொரேனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸை பரிசோதித்துப்பார்த்து சீனா நாடு இதனால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்துவிட்டே இந்த கொரோனா வைரஸை பரப்பியது. மருத்துவத்தில் தலைசிறந்த நாடாக கருதப்படும் இந்தியா கூட தற்பொழுது பாரிய தடுமாற்றத்தை கண்டுள்ளது. சர்வதேச ரீதியில் இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற சுகாதார மையத்தினுடைய அறிக்கைகளை பார்க்கும் பொழுது வெறும் கண்ணுடைப்பாகவே அது அமையப்பெறுகின்றது. ஒவ்வொரு நாட்டவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கான அறிவுரைகளை கூறுகின்றார்களே தவிர, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், பொலித்தீனால் உடலை பாதுகாத்தல் போன்ற விடயங்கள் ஒரு தற்பாதுகாப்பாக இருக்கிறதே தவிர கொரோனா வைரஸை அழிக்க உகந்தவையல்ல.
குறிப்பாக தொடர்ச்சியாக இருமல் ஒரு மணி நேரத்திற்கு உள் தொடருமாக இருந்தால் அது கொரோனா வைரஸிற்கான முதலாவது அடையாளமாக இருக்கிறது என்கின்றார்கள். இரண்டாவது விடயமாக ஒரு காய்ச்சல் உடம்பில் 37.8 டிகிரி செல்சியசை விட வெப்பம் அதிகரிக்குமாக இருந்தால் கொரோனா வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. அல்லது வாசனை மற்றும் சுவையை உணர முடியாது போனால் அது கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக அமைகிறது எனலாம். இவை ஒரு மனிதனிடத்தில் பொதுவாக இருக்கக்கூடியவை. உலக சுகாதார நிறுவனம் கூறுகின்ற கொரோனா தொற்று அறிகுறிகளாக:

 காய்ச்சல் பொதுவாக அதிகரிப்பது
 இருமல் அதிகரிப்பது
 சுவை மற்றும் வாசனையை உணரமுடியாமை
 தலைவலி அதிகரிப்பு
 மூக்கடைப்பு, சளி வடிதல் போன்றவை
 தொண்டையில் சிலவேளை எரிசல்
 தொடர் தும்மல்
 சுவாசித்தலில் சிக்கல்

இவ்வாறிருக்க இருமல் வந்தாலே கொரோனா வைரஸ் என்றதொரு நிலைப்பாடு அது முற்றிலும் தவறானதொன்று. எந்தவொரு வருத்தமும் ஒரு மனித உடலில் 14 நாட்கள் இருக்கக் கூடியவை அந்த 14 நாட்களுக்குள் சிகிச்சை வழங்காமல் இருந்தால் அவர் மரணிக்கக்கூடும். உலக சுகாதார அமைப்பானது இந்த கொரோனா வைரஸை சர்வதேச ரீதியாக கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இனி நான்காம் ஐந்தாம் அலை ஏற்பட்டாலும் கொரோனா வைரசுடன் சிறிது காலம் மக்கள் வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.
ஆகவே இதனை தடுப்பதற்கான வழிமுறைகளாக சர்வதேச ரீதியில் இடம்பெறுகின்ற நாடுகளினுடைய அரசியல் காய் நகர்வுகளின் தமது நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நிழல் யுத்தமே இந்த கொரோனா வைரசினுடைய செயற்பாடு. தற்பொழுது சீனாவுடன் பல நாடுகள் கைகோர்த்திருப்பது என்பது அதன் பின்வரும் காலங்களில் ஆபத்தான கட்டத்தையே எட்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆகவே சர்வதேச ரீதியாக உல்லாசப்பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது சீனாவினுடனான நட்புறவை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த பொழுது எந்தவொரு நாடும் தன்னிச்சையாக இலங்கையில் செயற்படமுடியாது போனது. அதுபோன்றதொரு நிலைமை உருவாக வேண்டும். 20.1 மில்லியன் மக்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் இந்த கொரோனா வைரஸினுடைய தாக்கம் எந்தவொரு அளவிற்கு சமூக ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வைரஸ் தொடர்பாக பலரும் பல ஆய்வுகளை செய்தும் ஆய்வுகள் அனைத்தும் தோல்வியிலே முடிவடைந்திருக்கிறது.

குறிப்பாக புற்றுநோயை கூட முற்றாக குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஓரளவேனும் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸினுடைய தாக்கத்தினால் ஒரு நாட்டின் பொருளாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகிறது என்றே கூறலாம். ஆகவே பாதிக்கப்படாத சீனா அல்லது பாதிப்பிலிருந்து மீள் வந்த சீனா தற்பொழுது உலக சந்தையில் ஏனைய நாடுகளை ஒரு கடன்கார நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுத்துவருகிறது. இலங்கையை பொறுத்தவரையில் ஒரு வீதமானோர் கூட முற்றாக கொரோனா தடுப்பூசி பயன்படுத்தவில்லை. உலக நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற பொழுது இந்த நாடு உலக அழிவை நோக்கி செல்கின்றது என்று சாஸ்திரிகள் கூறுகின்றார்கள். ஆனால் குறித்த கொரோனா வைரஸை இந்த சாத்திரிகளினால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. ஆலயங்களில் பலர் பூஜை வழிபாடுகளில் இதற்காக ஈடுபட்டு வந்த போதிலும் இறுதியாக இது இறைவனால் கொடுக்கப்பட்டது என்றே கூறினார்கள். இது இறைவனால் அனுப்பப்பட்ட கொடிய நோயுமல்ல. இது குறித்த சீன நாட்டினால் உலகம் முழுவதும் பரப்பப்பட்ட ஒரு வைரஸாகும். மனிதன் தன்னுடைய பகுத்தறிவுக்கு எட்டிய வகையில் செயற்படுகிறான். இறைவனால் கொடுக்கப்படுகின்ற வாதைகளை பொறுத்தவரையில் அந்த வாதைகள் உலக அழிவுக்கு ஒப்பானது என்று பைபிள், குர்ஆன், சமஸ்கிருதம் கூறுகின்றது.

ஆகவே இறைவன் மீது தப்பு சொல்வது தவறு. தற்பொழுது சீன நாட்டுடன் நாடுகள் மோதுவதற்கு தயங்குகின்றன. அமெரிக்கா கூட தயங்குகின்றது. எமது சுய பாதுகாப்பை அல்லது நாடுகளின் சுய பாதுகாப்பை நாங்களே தற்பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்பதனையே இன்றைய பூகோள அரசியல் கொரோனா வைரஸ் எடுத்துக்காட்டுகிறது எனலாம்.

SHARE