சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்

284

அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த சாத்துக்குடி.

சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

இது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை பாரப்போம்.

  • தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
  • இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், நல்ல தீர்வுக் காண முடியும்.
  • இவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், எலும்பு வலுவடையும்
  • தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
  • அவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், நாற்பது வயதை கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும், தேய்மானத்தின் அளவை குறைக்க முடியும்.
  • தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.
  • சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், இரத்தத்தில் உள்ள நச்சுமிக்க பொருட்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
  • ஒருவர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர உட்பொருட்கள், உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தியின் அளவு அதிகரிக்கும்.
  • சாத்துக்குடி ஜூஸ் புளிப்பாகவும், அதிக அசிடிட்டி கொண்டதும் கூட. இத்தகைய சாத்துக்குடியை ஒருவர் தினமும் ஜூஸ் வடிவில் எடுப்பதால், உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்கப்பட்டு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கீல்வாதம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கப்படும்.
  • சாத்துக்குடி ஜூஸ் திசுக்களில் யூரிக் அமிலம் தேங்குவதைத் தடுக்கும். இதன் விளைவாக வாத நோய் ஏற்படும் அபாயமும் குறையும்.
  • காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் சரும திசுக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
  • காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரால் தயாரிக்கப்பட்ட சாத்துக்குடி ஜூஸில், 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் தொண்டையில் உள்ள புண் விரைவில் குணமாகிவிடும்.

SHARE