ஜி.வி பட போஸ்டரை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

102
ஜி.வி.பிரகாஷுடன் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை சசி இயக்கி இருந்தார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்க இருக்கிறார். ஆக்‌சஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஹர்பஜன் சிங்
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
SHARE