ஜேர்மன் நகரை மொத்தமாக புரட்டியெடுத்த சூறாவளி: காயங்களுடன் தப்பிய பலர்

141

 

மேற்கு ஜேர்மனிய நகரமான பேடர்போர்ன் மீது வெள்ளிக்கிழமை வீசிய சூறாவளியால், டசின் கணக்கான மக்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்ததாகவும், மரங்கள் வேருடன் சாய்ந்ததாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேற்கு மற்றும் மத்திய ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.

மணிக்கு 130 கி. மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். பேடர்போர்ன் பகுதி பொலிசார் தெரிவிக்கையில், புயல் காரணமாக 43 பேர்கள் காயம்பட்டுள்ளதாகவும் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் அதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறும், தங்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE